ஆதிவாசி இளைஞரை அடித்து, செல்பி எடுத்துக் கொலை; கேரளாவில் அரங்கேறிய கொடூரம்! கேரளா மாநிலம்அட்டப்பாடி என்ற இடத்தில நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது வரையிலும் வட இந்தியாவில் மட்டுமே நடந்து வந்த கொடூரமான சம்பவங்கள் இன்று கல்வி அறிவில் முன்னேறிய கேரளாவிலும் நடந்திருப்பது மிகப்பெரிய கொடுமை ஆகும் கேரளா மாநிலம் அங்கமாலியில் மது என்ற ஆதிவாசி இளைஞரை அரிசி திருடிய குற்றத்திற்காக ஒரு கொடூர கும்பல் அடித்தே கொன்றிருக்கிறது. பசி அனைவருக்கும் பொதுவானது இந்த சமூகத்தில் ஒருவன் தன வயிற்று பசிக்காக திருதிருடுகிறான் என்றால் அது இந்த சமூகத்தின் குற்றமாக தான் இருக்கும் ஒரு பக்கத்தில் மாட மாளிகைகளும் செல்வ செழிப்பிலும் மக்கள் குதூகலம் நடத்தி கொண்டிருக்கும்போது மறு புறம் அன்றாட வயிற்று பிழைப்புக்காக மக்கள் படும் அல்லல் வேதனை சொல்லி மாளாது. திருட்டை நாம் நியாய படுத்தவில்லை ஆனால் இந்த திருட்டிற்கு இந்த தண்டனை நியாயம் இல்லை அதிலும் அதைசெலஃபீ எடுத்து சமூக வலை தலைகளில் பதிவிட்டது கேட்பதற்கு நாதி இல்லாத சமூகத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எ...