ஜுன்.2.2021. கன்னியாகுமரி மாவட்டம் தமுமுக சார்பாக பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கெதிராக வீடுகளின் முன் கண்டன பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடந்த 2019 ம் வருடம் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்ட திருத்தம் செய்ய பட்டது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மத சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது மத்திய அரசின் மதவெறிக்கு சான்றாகும் என்று பல் வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக வினர் புகுந்ததால் கலவரம் ஏற்ப்பட்டு பலர் உயிழந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் இருக்கும் அகதிகள் குடியுரிமை ...