ஜுன்.2.2021. கன்னியாகுமரி மாவட்டம் தமுமுக சார்பாக பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கெதிராக வீடுகளின் முன் கண்டன பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கடந்த 2019 ம் வருடம் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்ட திருத்தம் செய்ய பட்டது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மத சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது மத்திய அரசின் மதவெறிக்கு சான்றாகும் என்று பல் வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக வினர் புகுந்ததால் கலவரம் ஏற்ப்பட்டு பலர் உயிழந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் இருக்கும் அகதிகள் குடியுரிமை பெற CAA சட்டத்தின் படி விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. எனவே கொரோனா காலத்திலும் மக்கள் உயிருக்கு பாது காப்பில்லாத நெருக்கடியான சூழ்நிலையிலும் மத்திய அரசு CAA சட்டத்தை அமுல் படுத்துவதை கண்டித்து மாநிலம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் வீடுகளின் முன் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளி விட்டு பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லாMLA அறிவிப்பு செய்திருந்தார்.எனவே தமிழ்நாடு முழுவதும் இன்று ஜுன் 2 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியா குமரி மாவட்டத்தில் திங்கள் நகரில் கிளைத்தலைவர் நிஷாது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சகாபுதீன் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணை செயலாளர் சுல்பிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனாவினால் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது. தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜனை மக்களுக்கு கொடுப்பதில் மோடி அரசு தோல்வியை சந்திக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசிடம் ஆக்க பூர்வமான எந்த திட்டங்களும் இல்லாத நிலையில் மோடி பதவி விலக வேண்டுமென்று இந்தியா முழுவதும் கோரிக்கை வலுக்கிறது.எனவே தன்னுடைய தோல்வியை மறைக்க மதரீதியாக மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேட மோடி முயல்கிறார்முஸ்லிம்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மோடி அநீதி இழைத்து விட்டார் எனவே பாஜக வின் மத வெறியை கண்டித்து தமுமுக தலைவர் போராட்டம் அறிவித்ததின் பெயரில் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்வது உட்பட பல்வேறு நிவாரண பணிகளை செய்து வருவதின் மத்தியிலும் இன்று குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடை பெறுகிறது என்று மமக மாவட்ட செயலாளர் சகாபுதீன் தெரிவித்தார். தமுமுக மாவட்ட தலைவர் செய்யது அலி திருவிதாங்கோட்டிலும் தமுமுக மாவட்ட செயலாளர் சித்தீக் அழகிய மண்டபத்திலும் மாவட்ட பொருளாளர் ஃபைரோஸ் காஜா குளச்சலிலும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலம் தேங்காய் பட்டணம் தக்கலை வடக்கு சூரங்குடி மேக்கா மண்டபம் இரவிபுதூர்கடை போன்ற ஊர்களிலும் மக்கள் வீடுகளின் முன்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக