அரசியலா ! அது சாக்கடை.
அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்
கட்சியில் சேர போறியா முட்டாளா நீ
நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற
அத்தனைபேரும் அயோக்கியர்கள் உனக்கு வேற வேலை இல்லையா
நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே
இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது
ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான் என்றால் அதில் எள்ளளவும் பொய் இல்லை. ஒரு மனிதன் மருத்துவர் ஆக வேண்டுமென்றால் மருத்துவம் படிக்க வேண்டும் பொறியாளர் ஆகா வேண்டுமென்றால் பொறியியல் படிக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதி ஆக வேண்டுமென்றால் ஏதாவதொரு போக்குவரத்து காவலரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிக்கி கொண்டால் போதும். என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் இது தான் உண்மை.பெரும்பாலான அரசியல் கட்சி தொண்டர்களின் அரசியல் வாழ்க்கை இப்படி தான் இப்படி தான் துவங்குகிறது ஆம் காவலரிடம் மாட்டி கொண்ட தன வாகனத்தை மீட்க ஒரு பெரும்புள்ளி அல்லது சிறு அரசியல்வாதியின் சிபாரிசு தேவை படுகிறது இது கட்சியின் வார்டு செயலாளர் கவுன்சிலர் பஞ்சாயத்து தலைவர் எம் எல் ஏ , எம் பி , என்று பிரச்சனையின் வீரியத்தையும் தன்மையையும் பொறுத்து மாறு படும். இவ்வாறாக ஒருவன் தனக்கு உதவி செய்த அரசியல்வாதியின் விசுவாசி ஆகிறான்.அவன் எதிரியை தன எதிரியாக அவன் நண்பனை தன நண்பனாக கருத ஆரம்பிக்கிறான். இது ஒருவனின் அரசியல் ஆரம்பம் என்றால் வேறொருவன் சினிமாவை பார்த்து அரசியலில் வருகிறான் ஆம் தான் சினிமாவில் பார்த்த கதாநாயகனின் உண்மையான கதா பாத்திரம் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கற்பனையை நம்பி அரசியலில் குதிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். இன்னும் இதே போன்ற அற்ப காரணங்களுக்காக அரசியலுக்கு வந்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள் . இதிலும் ஒரு வேதனையான செய்தி என்னவென்றால் அரசியலில் அதிகமாக சாதித்தவர்களும் இவர்களே.
சமுதாயத்தில் இப்படி பட்ட அரசியல்வாதிகளில் வளர்ச்சிக்கு உரமாக இருப்பவர்கள் யாரென்று நாம் என்றாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அதிகபட்சமாக என்ன செய்வோம் இவர்களுக்கு வாக்களித்த மக்களை குறை சொல்லி விட்டு கடந்து போவோம் அல்லது அரசியலமைப்பை திட்டி தீர்ப்போம். ஆனால் இந்த அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது நான் கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன கேள்விகள் தான் என்பதை நம் மனங்கள் ஏற்பதில்லை. ஏனென்றால் இந்த கேள்விகளையும் பதில்களையும் நாம் தான் தொடுக்கின்றோம் நம் மீதான தவறுகளை நாம் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை ஏனென்றால் நாம் மனிதர்கள்நாம் தான் உலகில் பெரும்பாலாக வசிக்கிறோம் நமக்கு தினமும் காலை 9 மணியானால் அலுவலகத்துக்கு நேரமாகி விடும். மாத வாடகை கரண்ட் பில் ஸ்கூல் பீஸ் வாகன கடன் வீட்டுக்கடன் என்று எத்தனையோ தேவைகள் நமக்கிருக்கிறது இதற்கிடையே சமூகத்தை பற்றி சிந்திப்பதற்கு நமக்கேது நேரம் ஞாயிற்று கிழமை ஒரு நாள் தான் அன்று 10 மணி வரையிலாவது தூங்க வேண்டாமா , மாலையானால் ஜாலியா குடும்பத்தோட நண்பர்களோட ......
தவறு செய்யும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க நமக்கெங்கே இருக்கிறது நேரம். எதோ கிடைக்கும் நேரத்தில் கருத்து சொல்கிறோம் முகநூல் பதிவுகளை நாம் படிக்காவிட்டாலும் பகிர்ந்து விடுவோம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாமா?
பள்ளமான சாலையில் கார் ஒட்டி செல்வோம் கவுன்சிலர் எம் எல் ஏ எல்லாம் என்ன செய்றாங்களோ என்ற கேள்வியோடு ஆனால் அதே சாலையை செப்பனிட கேட்டு யாராவது போராடினால் அதன் காரணமாக 2 நிமிடம் வாகனத்தில் காத்திருக்க நேர்ந்தால் இவனுங்களுக்கு வேற வேலை இல்லையா போராட்டம் ஆர்ப்பாட்டம்னு மக்களை அவதிக்குள்ளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்று முனு முனுத்து கொண்டே செல்வோம் .
நம் வீடு நம் வாசல் நம் மொபைல் நம் லேப்டாப் என்று நம் வாழ்க்கையை சுருக்கி கொண்டு நம்முடைய சுயநலத்தை நியாயபடுத்த நாம் பயன் படுத்தும் வார்த்தை தான் அரசியல் ஒரு சாக்கடை .நம் வீட்டு அருகாமையில் சாக்கடை தேங்கியிருந்தால் அரசிடம் சொல்லி சுத்த படுத்துவோம் ஆனால் நம் வீட்டில் உள்ள அசுத்தத்தை நாமே சுத்தப்படுத்துவோம் இந்த தேசத்தை நம் வீடாக நாம் கருதினால் பக்கத்து தெருவில் பிரச்னை என்றாலும் அது நம்மை பாதிக்கும் என்ற எண்ணம் உருவாகும். அரசியலை சாக்கடை என்போம் அதை சுத்தம் செய்ய ஏதாவதொரு நடிகர் தன்னை பச்சை தமிழர் வெள்ளை தமிழர் என்று சொல்லி வருவார் அல்லது வேறு ஏதாவது ஒரு அரசியல்வாதி வருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம் அவர்கள் நல்லது செய்யவில்லை என்றால் குறையும் சொல்கிறோம் ஆனால் ஒரு முறை கூட நாம் ஏன் சுத்தம் செய்ய கூடாது என்று யோசிப்பதில்லை. சில நேரம் இந்த நிலைமையை நாம் மாற்றுவோம் என்ற கனவுகளோடும் லட்சியத்தோடும் ஒருவன் அரசியலுக்கு வந்தால் அப்போது தான் நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன அந்த கேள்விகளையும் விமர்சனங்களை அவனிடம் கேட்கிறோம் இந்த விமர்சனங்களையும் கடந்து ஒருவர் அரசியலில் தனையும் தன கொள்கையையும் வைத்து மக்கள் ஆதரவு கிடைக்கும்போது அய்யா நல்ல கண்ணு போல வயதாகி விடுகிறது அப்போது தூரமாக ஒரு குரல் கேட்க்கும் வயதாகி விட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என்று. ஆனால் செயல்பட முடியாவிட்டாலும் அரசியலிலிருந்து விலகாமல் செயல் படுவதற்கு செயல் தலைவர்களை நியமனம் செய்பவர்களிடம் கேட்பதற்கு இளைஞர்களிடம் கேள்வியே இருக்காது. நம் ரத்தத்தில் ஒரு வைரஸ் உருவாகி அதனால் நம் உடல் பாதிக்கப்படும்போது அதற்க்கு மாற்று மருந்து கொடுத்து நிவாரணம் பெற நாம் முயற்சிப்பதை போல நம் சமுதாயத்தில் அரசியல்வாதி என்ற பெயரில் கலந்திருக்க கூடிய வைரஸ்களின் மாற்று மருந்தாக அரசியலில் நாம் இறங்கி களையெடுக்க வேண்டும் .நல்லவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது கேள்விகள் அதிகமாகும்போது அரசியல் நமக்கான இடமில்லை என்று தானாக ஒதுங்கி கொள்வார்கள். நல்ல சிந்தனையாளர்களும் அறிவியலாளர்களும் பகுத்தறிவாளர்களும் முற்போக்குவாதிகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களும் இயற்க்கை ஆர்வலர்களும் அரசியலை ஒதுக்காமல் இணைந்து கொண்டால் நீர் ஆவியாவதை தடுக்க பத்து லட்ச ரூபாய்க்கு தெர்மாகோல் மூடி போட வேண்டிய அவசியம் இருக்காது மீத்தேன் அணு உலை ஹைட்ரொ கார்பன் போன்ற பேராபத்துகள் மக்களை அணுகாது. ஒவ்வொரு குடி மகனும் நம் சமூகத்தின் மீதான நம் பொறுப்புகளை உணர்ந்து செயல் படுவோம் கல்வி முறைகளை மாற்றி அமைத்து படித்தவர்களுக்கும் அரசியலுக்குமான இடை வெளியை குறைத்து விடுவோம்.
அரசியலை கற்போம்...........
அரசியலை கர்ப்பிப்போம் .........
அரசியல் செய்வோம் ........
H .சுல்பிக்கர்

Masha Allah Good Bhai
பதிலளிநீக்குஅருமை....
பதிலளிநீக்கு