குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு , தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு
குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு
அக்டொபர் 11,2017,குளச்சல்
கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்
எழில் கொஞ்சும் கன்னியா குமாரி மாவட்டத்தில் அழகான கடற்கரை கொண்ட ஊர் குளச்சல். இங்கே சிறப்பு வாய்ந்த கோயில்கள் பள்ளி வாசல்கள் பள்ளி கூடங்கள் மருத்துவமனைகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஊரின் அழகையும் பெருமையையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் விதமாக குளச்சல் நகராட்சியின் பணிகள் இருந்து வருவது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. குளச்சல் VKP பள்ளி அரசு மருத்துவமனை காவல் நிலையம் பஸ் நிலையம் பீச் ரோடு என்று எங்கு பார்த்தாலும் குப்பை மயமாகவே உள்ளது. இது இந்த பகுதியில் ஒரு விதமான துற நாற்றத்தையும் நோய்களை பரப்பும் கொசுக்களையும் உற்பத்தி செய்கிறது . மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணனிக்கான மக்கள் பாதிக்க பட்ட நிலையில் குளச்சல் நகராட்சியின் சுகாதார சீர் கேடு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்பட நூறு வாய்ய்ப்புள்ளது .
இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சனையல்ல கடந்த 13 வருடங்களாக குளச்சல் நகராட்சி இந்த குப்பை அகற்றும் விஷயத்தில் மிகப்பெரிய அளவில் பின் தங்கியுள்ளது பல கட்சிகளும் இது சம்பந்தமாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளது
இதை பற்றி குளச்சல் நகர மக்களிடம் கேட்டபோது பல முறை இந்த நகராட்சி நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக கோரிக்கை வைத்த பிறகும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமுமுக உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், க பல கட்ட போராட்டங்களை இதற்கு முன்பாக முன்னெடுத்தனர்
தற்போது நகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது எனவே இது சம்பந்தமாக குளச்சல் வியாபாரிகள் சங்கம் திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 8.10.2017 அன்று நடை பெற்றது அதில் இன்று 11.10.2017 குளச்சலில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்க பட்டிருந்தது அதனடிப்படையில் இன்று குளச்சலில் முழு கடை அடைப்பு நடத்த பட்டதோடு பொது மக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
H.SULBIKAR

கருத்துகள்
கருத்துரையிடுக