இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.
அரசியலா ! அது சாக்கடை. அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம் கட்சியில் சேர போறியா முட்டாளா நீ நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற அத்தனைபேரும் அயோக்கியர்கள் உனக்கு வேற வேலை இல்லையா நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...
Nice...
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு