முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குமரி திமுக வின் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் நடந்தது 900 பேர் கைது

நீட்தேர்விலிருந்துதமிழகத்திற்கு விலக்கு கொரி கன்னியா குமரி மாவட்டத்தில் திமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள் கட்சி விசிக பங்கேற்பு                                                                                        நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 27.07.2017 அன்று மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்க்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் தடையை மீறி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆயிர கணக்கான திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி விசிக கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. சேலம் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோவையில் கைது செய்ய பட்டார்             ...

கணவன் மனைவி பரிதாபங்கள்

#படித்ததில்_பிடித்தது..😃😃😃 சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த மனைவி, உதவிக்குக் கணவனை அழைத்தார்.... பலமுறை அழைத்தும் பதில் இல்லை. உள்ளே சென்று பார்த்தால்..., படுக்கையில் அலுவலகக் கோப்புகள், மடிக்கணினி இரண்டும் மடியில் கிடக்க அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். இடுப்பில் செருகியிருந்த அவளுடைய  கைபேசியை எடுத்துப் பார்த்தவாறே கணவனின் அருகில் சென்று.., அவர் தலைமுடியில் விரல் விட்டு மென்மையாகப் பற்றினார். அடுத்த நொடி, "பளார்" என்ற சத்தம். அறை விழுந்த கன்னத்தைப் பிடித்தபடி திருதிரு வென விழித்த கணவனிடம் தன் கைபேசியின் "Whatsapp"பக்கத்தை மனைவி காட்டினார். கணவன் பெயருக்குக் கீழே, "last seen 1 minute ago"-என்றிருந்தது. #டெக்னாலஜி_இம்புரூவ்மெண்ட்.....

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.