முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திர இந்தியாவின் அடிமைத்தனம்

 குமரி எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அத்தனைபேருக்கும் 71 வது சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்,
                                            நம் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த்து விட்டோம் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நாம் கொடியேற்றி இனிப்பு வழங்கி நண்பர்கள் உறவினர்களோடு வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டு சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம் ஆனாலும் நாம் அனைவரும் நமக்கு நாமே கேட்டு கொள்கிற கேள்வி நாம் இந்த சுதந்திரத்தை உண்மையிலேயே அனுபவிக்கிறோமா ? சுதந்திரம் என்றால் என்ன? அடிமை இந்தியாவிற்கும் சுதந்திர இந்தியாவிற்குமான வேறுபாடு என்ன?  இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கே விடை தெரியம் ஆனாலும் இதை நாம் வெளியே சொன்னால் நம்மை தேசத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி நம்மை இந்த தேசத்தின் எதிரிகளாக சித்தரிப்பதற்க்கே ஒரு கூட்டம் இயங்கி கொண்டிருக்கிறது அவர்களின் போலியான தேச பக்தியும் நம் பயத்திலான தேசப்பற்றும் இன்னும் இந்த நாட்டின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கி விடும். எதற்க்காக நம் முன்னோர்கள் தன உயிரை  கூட துச்சமாக மதித்து வெள்ளை ஏகாதிபத்தியத்திற்க்கெதிராக போர் செய்தார்கள் அவர்களின் துப்பாக்கிகளின் முன்னால்  தன் நெஞ்சை நிமிர்த்தி வெள்ளையனே வெளியேறு என்று சூளுரைத்தார், தூக்கு மேடைகளையும்  சிறை கொட்டடிகளையும்  பொருட் படுத்தாமல் சுதந்திரம் ஒன்றே தம் உயிர் மூச்சென்று ஆர்ப்பரித்து வெள்ளை அரசிற்கு எதிராக போராடியது யாருக்காக அவர்களின் சந்ததிகளான நாம் ஒரு சுதந்திர தேசத்தில் வாழ வேண்டும் நம் உரிமைகள் பாது காக்க பட வேண்டும் என்ற எதிர் கால வாரிசுகளின் மீதான அக்கறையினால் தானே தவிர வேறொன்றுமில்லை. சர்வாதிகாரம் அதிகமான வரி தவறான சட்டங்களால் மக்களை கொடுமை படுத்துதல் இந்தியர்களின் பொருளாதார சுரண்டல் உழைப்பு சுரண்டல் நாட்டு வளங்களை அந்நிய கம்பெனி நிறுவனத்திற்கு தாரை வார்த்தல்  இவையெல்லாம் தானே பிரிட்டிஷாருக்கு எதிராக நம் முன்னோர்களை போராட தூண்டியது. 1947 க்கு முன்னால் இருந்த  இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் கொள்கைகள் இன்று 2017 ளிலும் தொடர்கிறதென்றால்  நாம் சுதந்திர தேசத்தில் இருக்கிறோம் என்ற போலியான பிம்பத்தை நமக்குள்ளே நாமே செலுத்தி விட்டு போலி தேச பற்றாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண வரிக்ககெதிராக நம் முன்னோர்கள் அன்றய அரசை எதிர்த்து  போராடினார்கள் என்றால் இன்றய கொடுமையான வரிக்கெதிராக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நம் முன்னோர்களின் வீரம் அவர்களின் தியாக உணர்வு நமக்கு இல்லாமல் போனதின் காரணம் என்ன? வெள்ளை அரசாங்கத்தால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது அதன் பெயர் ரௌலட் சட்டம் . ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய காரணத்தால் 1919 ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில ஒரு பெரும் உயிர் தியாகம் நடந்தது. ஆங்கிலேயரின் கடுமையான சட்டத்திற்க்கெதிராக நம் முன்னோர்கள் பெரும் உயிர் தியாகம் செய்தார்கள் ஆனால் இன்று சுதந்திர இந்தியாவில் தன நாட்டு இயற்க்கை வளங்கள் அழிய போகிறது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதத்தில் துண்டு பிரசுரம் விநியோகித்த வளர்மதிக்கு குண்டர் சட்டம் இலங்கையில் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த மெரீனாவுக்கு சென்ற திருமுருகன் காந்திக்கு குண்டர் சட்டம் இந்த நாட்டின் கலாச்சாரத்தை பாது காக்க ஜல்லி கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது தடிஅடி.இது தான் இன்றய நிலைமை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அடிமை இந்தியாவின் மக்கள் சுதந்திரமாக வாழ எண்ணினார்கள் ஆனால் சுதந்திர இந்தியாவின் மக்கள் அடிமைகளாக வாழவே ஆசை படுகிறார்கள் இதற்க்கு  காரணம் நாம் நம் நிலையை உணராததும் நம் முன்னோர்களின் தியாகத்தை அறியாததும்  அதன் தேவைகளை புரிந்து கொள்ளாததுமே, இதை நாம் என்று உணர்கிறோமோ அன்று தான் சுதந்திரத்திற்கான தேவை நமக்கு ஏற்படும், அது வரையிலும் சுதந்திர இந்தியாவின் அடிமைகளாகவே வாழ்வோம்                                                                                                                                                                                             -H .சுல்பிக்கர
     குமரி மாவட்டம்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...